சிறுமியுடன் குடும்பம் நடத்திய வாலிபர் : பின் நேர்ந்த சோகம்!!

275

கிருஷ்ணகிரி…

சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் மற்றும் பாதுகாக்கும் விதமாக 2012 நவம்பர் 14 அன்று இந்தியாவில் போக்சோ சட்டம் நடைமுறைக்கு வந்தது.

மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே சிறுமியை கடத்திய வழக்கில் வாலிபருக்கு விரைவு மகளிர் நீதிமன்றம் 12 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த சின்னஆலேரஅள்ளியை சேர்ந்தவர் கலையரசன் (27). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2019 ம் ஆண்டு ஏப்பரல் மாதம் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை மிரட்டி திருமணம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் கலையரசனை போலீசார் கைது செய்தனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட 2 நாளில் இளம்பெண் தற்கொலை..! சென்னை அதிர்ச்சி இந்த வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் நீதிபதி லதா தீர்பபு கூறினார்.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட கலையரசனுக்கு சிறுமையை கடத்தியதற்கு ஓராண்டு சிறை தண்டதனையும், ஆயிரம் ரூபாய் அபராதம்.

மேலும் சிறுமையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றத்திற்கு 10 ஆண்டு சிறையும், குழந்தை திருமண சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை என மொத்தமாக 12 ஆண்டு சிறை மற்றும் 4 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தார்.