செல்போனில் கவனம் செலுத்தி விபத்துக்குள்ளான இளம்பெண் : விழுந்ததையும் செல்போனில் வீடியோ எடுத்து பதிவிட்ட சம்பவம்!!

1288

விபத்து…..

செல்போன் மோகம் இன்றைய தலைமுறையினரை ஆட்டி படைத்து வருகிறது. காலையில் எழும் போதே செல்போனை பார்த்துவிட்டு எழுவதில் தொடங்கி, உறங்க செல்வது வரை உடலில் ஓர் அங்கமாகவே செல்போன் மாறிவிட்டது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் வாகனத்தில் செல்லும்போது வண்டியை நேராக பார்த்து ஓட்டாமல் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே சென்று விபத்தில் சிக்கி சில்லறை வாங்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

அந்த வகையில் கொட்டும் மழையில் தம்பியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தவாறு பேசிக்கொண்டே செல்வதுடன், வண்டியை ஓட்டும் இளைஞரையும் வாகனத்தில் கவனம் செலுத்த விடாமல் செல்போனை பார்க்க சொல்லி கடைசியில் விபத்து ஏற்பட்டு இருவரும் சாலையில் விழுந்து காயமடைந்துள்ளனர்.

ஆனால், அந்த பெண் அதையும் பொருட்படுத்தாமல், விபத்து ஏற்பட்டதையும் கண்டெண்டாக்கி வீடியோ போட்டிருப்பது நெட்டிசன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை போக்குவரத்து காவல்துறை மேலும் உயர்த்தியுள்ளது. லைசன்ஸ் இல்லாமல் இருந்தால் 5000 ரூபாய், டிராஃபிக் சிக்னலில் நிற்காமல் சென்றால் முதல் முறை 1000 ரூபாயையும், இரண்டாவது முறை சிக்கினால் 10000 ரூபாயும் இனி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் முதல் முறை 1000 ரூபாயும், இரண்டாவது முறை சிக்கினால் 10000 ஆயிரம் ரூபாயையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாயாக இருந்த ஹெல்மெட் அபராதம் இப்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

காவல்துறையின் இந்த உட்சபட்ச அபராத விதிப்புக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், எந்த வித விதிகளையும் பின்பற்றாமல் சிலர் இதுபோல விபத்தில் சிக்கும் நிகழ்வுகள் மற்றவர்களுக்கு முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாதீர்கள், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.