செல்லும் இடமெல்லாம் திருமணம் செய்து 8 மனைவிகளுடன் வாழும் இளைஞன் : சுவாரசிய தகவல்!!

503

தாய்லாந்து….

இளைஞர் ஒருவர் 8 பெண்களை திருமணம் செய்தததை அந்த மனைவிகள் கண்டுபிடித்ததால் .அனைவரையும் ஒரே வீட்டில் வைத்துக்கொண்டு சமாளித்து வருகிறார் .

தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட் என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி வருகிறார்.இவர் ஒரு பெண் பிரியர் ஆவார் .அதனால் அவர் தன்னுடைய பணத்தையும் அழகையும் வைத்து பல பெண்களை மயக்கி திருமணம் செய்து கொண்டு வருகிறார்.

அதன் படி அவர் தன் முதல் மனைவியை ஒரு திருமணத்தில் சந்தித்து கல்யாணம் செய்து கொண்டார் .அந்த வரிசையில் இரண்டாவது மனைவியை மார்க்கெட்டில், மூன்றாவது மனைவியை மருத்துவமனையில் வைத்து சந்தித்துள்ளார்.

அதுபோல நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவியை இன்ஸ்டாகிராம் பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

7வது மனைவியை அவரது தாயுடன் கோவிலுக்கு செல்லும் போதும், எட்டாவது மனைவியை சுற்றுலா சென்ற இடத்தில் பார்த்துள்ளார்.இப்படி அவர் ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் இருப்பதை அந்த எட்டு மனைவிகளும் ஒரு நாள் கண்டு பிடித்து விட்டனர் .

அதன் பிறகு இது பற்றி அவர்கள் அந்த சரோட்டிடம் கேட்டபோது, அவர்களை ஒரே வீட்டிற்கு வரவைத்துள்ளார் .

பிறகு அவர்கள் அனைவருடனும் ஒரே வீட்டில் சந்தோஷமாக சமாளித்து வாழ்ந்து வருகிறார் .அவர்களுக்குள் போட்டி பொறாமை ஏற்படாத வண்ணம் அவர்களையெல்லாம் சரி சமமாக நடத்தி வாழ்ந்து வருவதாக அவர் கூறினார்.

மேற்கொண்டு அவருக்கு இன்னும் கல்யாண ஆசை இருப்பதால் இந்த மனைவி வேட்டை தொடரும் போல் தெரிகிறது .