திண்டுக்கல்….
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சந்தைப்பேட்டையை சேர்ந்த நவீன்குமார்(35) என்பவருக்கும் சாலையூர் நால்ரோட்டை சேர்ந்த விஜயசாந்தி என்பவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 8வயது ஆண் குழந்தையும் 3வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
நவீன் குமார் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் இரும்புக் கடையில் லோடுமேனாக பணியாற்றி வருகிறார். தினந்தோறும் குடித்துவிட்டு விஜயசாந்தியிடம் நவீன்குமார் சண்டை போட்டு உள்ளார் இந்நிலையில் நவீன் குமார் கழுத்து அறுத்து காட்டுப் பகுதியில் சடலமாக கிடப்பதாக பொதுமக்கள் வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் மனைவி விஜயசாந்தி முன்னுக்கு முரணாக பதில் அளித்து வந்ததை அடுத்து தங்களுடைய பாணியில் விசாரணையை துவங்க ஆரம்பித்தனர்.
அதில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. நவீன்குமார் தினமும் குடித்துவிட்டு தன்னை செக்ஸ் டார்ச்சர் செய்வதாகவும் விஜயசாந்தி காவல்துறையிடம் கூறினார். இந்நிலையில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த லோடுமேன் சிவக்குமார் என்பவருடன் விஜயசாந்திக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த நவீன் குமார் விஜயசாந்தியை சரமாறியாக அடித்து துன்புறுத்தி உள்ளார். இந்த விஷயத்தை தனது கள்ளக்காதலனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயசாந்தி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன் சிவக்குமார் நேற்று மாலை கோடாங்கிபட்டிக்கு வந்து நவீன் குமாரை தண்ணி அடிப்பதற்காக தனியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவீன் குமாரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தனனுடைய கள்ளக்காதலியுடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.
அதனை நம்பாத விஜயசாந்தி பொய் சொல்லாதே என்று கூறியதை அடுத்து சிவக்குமார் தனது தொலைபேசியில் வீடியோ கால் செய்து நவீன் குமார் கொலை செய்ததை காண்பித்து உள்ளார். சம்பவம் நடத்த இடத்தில் ஒன்னும் தெரியாதது போல் தனது நாடகத்தை வெளிப்படுத்திய விஜயசாந்தியிடம் காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதல் தொடர்பால் கணவரையே கொலை செய்து விட்டு நாடகமாடிய பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.