ஜப்பானில் நிலநடுக்கத்தின் போது மகன் மறைத்து வைத்திருந்த ஆபாச கார்ட்டூன் இதழ்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்து தாய் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஜப்பானில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 5 பேர் பலியாகியுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்டோர் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பூகம்பத்தினால் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பள்ளிகள் சேதமாகியிருந்த நிலையில், பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதில் அவர், பூகம்பத்தின் காரணமாக தான் ஒளித்து வைத்திருந்த கார்ட்டூன் ஆபாச புகைப்படங்கள் மற்றும் இதழ்கள் அம்மாவிற்கு தெரிந்துவிட்டது.
இதனால் நான் அவர் முன் தலைகுணிந்து நிற்க வேண்டியதாகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இதைக் கண்ட இணையவாசிகள் கிண்டலாக தங்களுடைய கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவேற்றேம் ஆகியிருந்த நிலையில், மீண்டும் செவ்வாய் கிழமை அதே மாகாணத்தில் 4.0 அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.