திருமணம்….
தமிழகத்தில் ஜோதிடரின் பேச்சைக்கு கேட்டு 14 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த சம்பவத்தில், தற்போது அந்த சி றுமி க ர்ப்பமாக இருப்பது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு ரத்னேஷ்வரன் என்ற 27 வயது மகன் உள்ளார்.
இவருக்கும், இவரின் தாய் மாமன் மகளான 14 வயது சிறுமிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
சிறுமிக்கு திருமணம் நடந்த தகவல் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வர சட்ட விரோதமாக சிறுமிக்கு நடந்த திருமணம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியினர் பொலிசாருக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், மணமக்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், சிறுமி என தெரிந்தும் திருமணம் செய்து கொண்ட ரத்னேஷ்வரன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பொலிசார் நடத்திய வி சாரணையில், குடும்ப ஜோசியர் ஒருவர் 27 வயதில் ரத்னேஷ்வரனுக்கு திருமணம் நடத்தி வைத்தால் இருவரது வாழ்க்கையும் நலமாக இருக்கும் என கூறி அவர்களின் திருமணத்திற்கும் நாள் குறித்து கொடுத்துள்ளார். ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டில் வைத்து திருமணம் நடத்திய நிலையில் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்து வந்துள்ளது.
ஆனால் மூன்றாம் மாதம் கழித்து நடந்த தாலி பெருக்கு நிகழ்ச்சி காரணமாக சிறுமிக்கு சட்ட வி ரோதமாக திருமணம் நடந்த தகவல் மற்றவர்களுக்கும் தெரிய வந்துள்ளது. மேலும், இதில் அந்த சிறுமி தற்போது க ர்ப்பமாக இருப்பது தான் பொலிசாருக்கு அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.