தங்கை முறையான சிறுமிக்கு பாலியல் தொல்லை : நேர்ந்த விபரீதம்!!

306

விருதுநகர்…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவர் கோயம்புத்தூர் பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கொத்தங்குளம் பகுதியிலுள்ள தங்கை முறை கொண்ட உறவுகார பெண் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக,

அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் நவீன்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த பிரத்யேக சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.