தண்ணீர் சூடாக்கும் போது நேர்ந்த விபரீதம்: அதிர்ச்சியில் உறவினர்கள்!!

262

சென்னை..

சென்னை தாம்பரம் அருகே தண்ணீரை சூடாக்கும்போது ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து கணவர் உயிரிழந்தார்.

மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராஜகீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், குளிப்பதற்காக வாளியிலிருந்த தண்ணீரை சிறிய ஹீட்டர் மூலம் சூடாக்கியுள்ளார். அப்போது தண்ணீர் சூடாகிவிட்டதா என பார்ப்பதற்காக வாளியில் கை வைத்தபோது,

ஹீட்டரிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து அவரது அலறல் சப்தம் கேட்டு காப்பாற்ற முயன்ற சதீஷ்குமாரின் மனைவி ரேவதியையும் மின்சாரம் தாக்கியுள்ளது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சதீஷ்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரேவதிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.