தந்தை பாலூட்டும் அதிசயக் காட்சி!! இணைய உலகை கலக்கிக்கொண்டிருக்கும் பரபரப்பு வீடியோ!!

1304

பொதுவாகவே உலக ஜீவராசிகள் அனைத்திலும் தாய்க்கும் அது பெற்றெடுக்கும் புதிய உயிருக்கும் இடையிலான உறவு மகத்துவமாகவே இருக்கும்.

அதுவே மனிதஇனமானால் அன்னைக்கும் மகவுக்கும் இடையிலான உறவு அற்புதமாகவே தொடர்கிறது. ஆனால் அமெரிக்காவில் உள்ள இந்த தந்தையும் அவ்வாறான ஒரு உன்னதமான உறவுக்கு தந்தையர்களும் சளைத்தவர்கள் இல்லை என நிருபித்துள்ளார்.

கடந்த 26 ஆந் திகதியன்று அவரது மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது.தாய்க்கு இருந்த சிக்கலான உடல் உபாதைகள் காரணமாக இந்த குழந்தை கூட அவசரமான சிசேரியன் அறுவைச்சிகிச்சை ஊடாக வெளியே எடுக்கப்பட்டது.

இதனையடுத்து தாய்பால் கொடுக்ககூடிய அளவுக்கு அவரது உடல் நிலை இல்லாததால் அவ்வாறு செய்யக்கூடாதென மருத்துவர்கள் எச்சரித்தனர். இதனால் அந்தப்பணியையும் இந்தத்தந்தையே செய்தார். தனது மார்பின் ஊடாக தந்தை பாலூட்டும் இந்தக்காட்சி தற்போது உலகளாவிய அளவில் பிரபலமாகியுள்ளது.