தனியாக இருந்த முறைப்பெண் கொலை : வெளியான அதிர்ச்சி பின்னணி!!

247

திருநெல்வேலி….

திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த பேச்சி என்பவருடைய மகன் பசுபதி என்ற பாண்டி (35). இவர் குளத்து வேலைசெய்து வருகிறார். இவருடைய முறைப்பெண் பிரியா (25) தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். பசுபதியும் அங்கு தான் வசித்து வருகிறார்.

பிரியாவின் அப்பா அம்மா இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் ஏற்கனவே பசுபதிக்கு பிரியாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெரியோர்கள் முடிவு செய்த நிலையில் நேற்று பிரியாவின் பாட்டி வெளியே சென்றுள்ளார்.

அப்போது பசுபதியும், பிரியாவும் தனியே வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில், திடீரென்று பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்க்கையில் பிரியாவை பசுபதி சுத்தியால் அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பசுபதியை பிடித்து, கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்து வருகின்றனர்.

இதில் பசுபதி மற்றும் பிரியா இருவருக்கும் அடிக்கடி மனநலம் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து பசுபதியை போலீசார் கைது செய்து நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.