தன் குழந்தையை தானே வயிற்றில் சுமக்கும் உலகின் முதல் ஆண் : ஆச்சரிய புகைப்படம்!!

749

கர்ப்பமுற்றிருக்கும் உலகின் முதல் ஆணின் புகைப்படம் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thomas Beatie (44) பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர், பின்னர் திருநம்பியானார். வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும் தனது கர்ப்பப்பை முதலான உள்ளுறுப்புகளை அவர் அகற்றவில்லை.

இதனால் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் கருவுற்ற அவர் இது வரை மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளதோடு, தற்போது நான்காவது முறையாக கருவுற்றிருக்கிறார்.

முன் தள்ளிய வயிற்றுடன் அவர் நிற்கும் புகைப்படத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

என்ன, பிரசவம் மட்டும் அறுவை சிகிச்சை முறையில்தான் நடக்கும், என் உடலை நானே சேதப்படுத்த விரும்பவில்லை என்று வேடிக்கையாகக் கூறுகிறார் Thomas Beatie.