தன் மனைவியை கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன் : என்ன காரணம் தெரியுமா?

336

பெங்களூருவில்…

பெங்களூருவில் தன் மனைவி காதலித்த நபருடன் கணவரே மனைவியை அவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் ஜாமுய் என்ற பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் குமார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் முதல் மனைவி எதிர்பாராத விதமான மரணமடைந்துவிட்டார். இதனால் இவர் இரண்டாவதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஷிவானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திருமணம் முடிந்ததும் ஷிவானியும் விகாஷ் குமாரும் பெங்களுருவிற்கு குடியேறியுள்ளனர். விகாஷ்குமார் பெங்களருவில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் திருமணத்திற்கு முன்பே ஷிவானிக்கு அவரது சொந்த ஊரிலிருந்த சச்சின் என்பவருக்கும் காதல் இருந்துள்ளது.

இந்த காதலை மறைத்து ஷிவானியின் குடும்பத்தார் அவரை விகாஷ் குமாருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். இந்நிலையில் திருமணத்திற்கு பின்பும் ஷிவானி- சச்சினின் காதல் கள்ளக்காதலாக தொடர்ந்துள்ளது.

சச்சினும் ஷிவானிக்காக பெங்களுருவில் ஒரு வேலையை தேடிக்கொண்டு பெங்களுருவிற்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் ஷிவானியும் சச்சினும் அவ்வப்போது விகாஷ் குமாருக்கு தெரியாமல் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் விகாஷ் குமாருக்கு தெரியவந்ததும் அவர் தன் மனைவியை கண்டித்து இதுஎல்லாம் தவறு அவருடன் பழகுவதை நிறுத்திக்கொள்ள சொல்லிகேட்டுள்ளார். ஆனால் ஷிவானி அதை கேட்காமல் சச்சினிடம் தொடர்ந்து பழக்கத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஷிவானியின் இந்த போக்கு விகாஷிற்கு பிடிக்காததால் அவர் ஷிவானியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவருக்கு சச்சினையே பிடித்திருப்பதாக சொல்லிவிட்டதால், விகாஷே தனது மனைவியை அவரது கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைக்க சம்மதித்துவிட்டார்.

இந்நிலையில் விகாஷே அவரது தலைமையில் பெங்களுருவில் வைத்து இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.