தமிழக இளம்பெண் கேரளாவில் சடலமாக மீட்பு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

1063

கேரளா…..

கேரளாவின் கோழிக்கோடு அருகே விடுதியில் வெள்ளிக்கிழமை இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்தவர் கோவையைச் சேர்ந்த ஜெயந்தி (26) என அடையாளம் காணப்பட்டார். உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெட்டிக்ஸில் உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை அகாடமியின் மாணவர்கள் நிர்வாகத்திற்கு தெரிவித்து, போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் இப்பள்ளியில் சேர்ந்தார். பாலுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.