தம்பியின் அந்தரங்க உறுப்பை பீர் பாட்டிலால் அறுத்துக் கொன்ற அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

424

ஆந்திரா….

அண்ணியுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்த தம்பியை அண்ணன் பீர் பாட்டிலால் அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலையில் கணவனுடன் சேர்ந்து அண்ணியும் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாளேடுகளில் திருப்பினால் குற்றச் செய்திகளே அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. அதில் பெரும்பாலான செய்திகள் கொலை செய்திகளாக உள்ளன. ஒரு கொலை செய்திக்கு பின்னணியில் பெரும்பாலும் திருமணத்துக்கு புறம்பான உறவு இருப்பதை பார்க்க முடிகிறது.

அந்த அளவுக்கு சமூகத்தில் கள்ளக்காதல், அதனால் ஏற்படும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது போன்ற குற்றங்களை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

அதுபோன்ற உறவில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் கொலை தற்கொலைககளில் முடிவதை பார்க்க முடிகிறது. இந்த வரிசையில் அண்ணியுடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த மைத்துனனை மனைவியின் துணையுடன் அண்ணன் அடிக்க கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் நார்பலா மண்டலம் நானபள்ளியில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த போலீஸார் தெரிவித்திருப்பதாவது:- வீரநாரப்பா கவுட் , மற்றும் நாராயணசாமி ஆகியோர் சகோதரர்கள் ஆவர். அண்ணன் வீரநாரப்பா மனைவி பத்மாவதி. இவருக்கும் மைத்துனன் நாராயணசாமிக்கும் இடையே பல மாதங்களாக திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்தது.

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் இந்த விஷயம் தனது கணவருக்கு தெரிந்து விடும் என அஞ்சிய பத்மாவதி மைத்துன்னஃ நாராயணசாமியை புறக்கணிக்க தொடங்கினார். ஆனால் நாராயணசாமி அண்ணியுடனான உறவை கைவிட மறுத்து அடிக்கடி அண்ணி பத்மாவதிக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் மைத்துனன் நாராயணசாமியின் தொல்லை தாங்க முடியாத பத்மாவதி தங்கள் தம்பி நாராயணசாமி தன்னை துன்புறுத்துவதாக கணவரிடம் கூறினார். அதை கேட்டு ஆத்திரமடைந்த வீரநாரப்பா தம்பி நாராயணசாமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

திட்டமிட்டபடி கடந்த 9ஆம் தேதி இரவு 9 மணி அளவில் நாராயணசாமியை அவரது பண்ணையிலுள்ள தோப்புக்கு வரவழைத்தனர். அப்போது நாராயணசாமியுடன் பத்மாவதி அசைவார்த்தைகளை பேசினார். அப்போது அவருடன் மீண்டும் அவர் அத்துமீற முயற்சித்தார்.

ஏற்கனவே திட்டமிட்டபடி வீரநாரப்பா தம்பி நாராயணசாமியை பின்னால் இருந்து கடுமையாக தாக்கினார். அப்போது கீழே சரிந்த நாராயணசாமியின் கால்களை பத்மாவதி பிடித்துக்கொண்டார். அப்போது நாராயணசாமியின் ஆணுறுப்பை பலமாக எட்டி உதைத்தார் நாரப்பா.

பின்னர் அங்கிருந்த பீர் பாட்டிலால் நாராயணசாமியின் ஆணுறுப்பை வெட்டினார் நாரப்பா. பின்னர் நாராயணசாமியின் கழுத்தில் இருந்த தாயத்து கயிற்றால் அவரின் கழுத்தை இறுக்கி கொன்றனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை வீர நாரப்பாவை சந்தேகத்தின் பெயரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது தன் மனைவியுடன் இணைந்து தான் தன் தம்பியை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வீர நாரப்பா மற்றும் அவனது மனைவியை போலீசார் கைது செய்தனர்.