தறிகெட்ட இரட்டை காதலால் கர்ப்பிணியான காதலி : குடும்பத்தையே புரட்டிப் போட்ட துயரம்!!

484

கர்நாடக மாநிலம்….

ஒரே நேரத்தில் இரு இளைஞர்களை காதலித்த பெண் ஒருவர், கர்ப்பிணியான நிலையில் தனது கர்ப்பத்திற்கு யார் கரணம் ? என்பது தெரியாததால், வீட்டில் தனக்கு தொப்பை வந்து விட்டதாக கூறி நடித்து சமாளித்த நிலையில் குறைபிரசவத்தில் பலியான சோகம் அரங்கேறியுள்ளது

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம், கும்சி கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் – சம்பங்கி தம்பதியின் 20 வயதான மகள் அஸ்வினி. இவர் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அங்கு தன்னுடன் பணிபுரிந்த பசவராஜ் என்பவரை காதலித்து வந்த அஸ்வினி தனது வீடு இருக்கும் பகுதியில் மதுசூதனன் என்பவரையும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. இரு காதலர்களும் அஸ்வினியின் வீட்டுக்கு வந்து அவ்வப்போது எல்லை மீறி காதலை வளர்த்ததால் அஸ்வினி கர்ப்பமானதாக கூறப்படுகின்றது.

அஸ்வினி கர்ப்பமான தகவல் அறிந்ததும் இரு காதலர்களும் தாங்கள் கர்ப்பத்துக்கு காரணமில்லை என்று கூறி கையைவிரித்து ஒதுங்கிக் கொண்டதால், இருவரில் தான் யாரால் கர்ப்பமானோம் ? என்ற குழப்பத்துக்குள்ளான அஸ்வினி, இதனை வெளியில் சொல்ல இயலாமல் தவித்தார்.

குடும்பத்தாரிடம் தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து வந்த அஸ்வினியின் வயிறு பெரிதாக தெரியவே அவரது தாய் சம்பங்கி கேட்டபோது அதிகமாக சாப்பிடுவதால் தனக்கு வயிற்றில் தொப்பை விழுந்து விட்டது அதனால் தான் பெரிதாக தெரிகிறது என கூறி சமாளித்துள்ளார்.

தனது இரட்டை காதல் விவகாரத்தை வெளியில் சொல்ல அவமானப்பட்டு அஸ்வினியும் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை வெளியில் கூறாமல் மவுனம் காத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு அஸ்வினிக்கு பிரசவ வலி ஏற்பட்டது உடனடியாக அவரது தாய் சிமோகா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது அஸ்வினியை பெரிசோதித்த மருத்துவர்கள் மூலமாக தங்கள் மகள் 7 மாத கர்ப்பமாக இருப்பதை பெற்றோர் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது அவர் இரட்டை காதலர்களால் தனக்கு நேர்ந்த கர்ப்பம் குறித்து பெற்றோரிடம் விவரித்துள்ளார். இதற்க்கிடையே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அஸ்வினிக்கு குறைபிரசவத்தில் கு.ழ.ந்தை இறந்தே பிறந்துள்ளது. கு.ழ.ந்தை இறந்த இரண்டு மணி நேரம் கழித்து தாய் அஸ்வினியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிமோகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது காதலர்களான பசவராஜ் மற்றும் மதுசூதனன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களுடன் காதலில் விழுந்த இளம் பெண்கள் திருமணத்துக்கு முன்பே கர்ப்பிணியானால் என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு எச்சரிக்கை பாடம்..