கின்னஸ் சாதனை
குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்த நிலன்ஷி படேல் என்ற 16 வயது பெண் தலைமுடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 11 ஆண்டுக்குள் நிலன்ஷி தனது தலைமுடியை மிக நீளமாக வளர்த்து உலக சாதனை படைத்து உள்ளார்.
நிலன்ஷி படேல் தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் சிறுவயதில் இருந்தே ஆர்வம் காட்டியும் தலைமுடியை பராமரிப்பதற்காக பிரத்யேகமாக அவர் நேரத்தை செலவிட்டும் வந்துள்ளார். தற்போது அவரது தலைமுடி நீளமாக வளர்ந்தது. தற்போது அவரது தலைமுடியின் நீளம் 170.5 சென்டி மீட்டர் (5 அடி 7 இஞ்ச்) ஆகும்.
அவரது இந்த சாதனை 2019-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது. நிலன்ஷியின் இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தக தயாரிப்பாளர்கள் அங்கீகரித்து உள்ளனர்.
இதற்கு முன்பு அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஏபிரில் என்ற பெண்ணின் 152.5 சென்டி மீட்டர் நீளமுள்ள தலைமுடிதான் சாதனையாக இருந்தது. பிறகு அந்த சாதனையை கெயிட்டோ என்ற பெண் 155.5 சென்டி மீட்டர் நீள தலைமுடி வளர்த்து முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.