இமாச்சல பிரதேசத்தில்..
இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவால் உ.யிரிழந்த தாயின் உ.டலை மகனே தோளில் சுமந்து சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. கான்கிரா மாவட்டத்தின் ரானிடால் பகுதியை சேர்ந்தவர் வீர் சிங். கடந்த 12ம் தேதி இவரது தாய்க்கு காய்ச்சல் ஏற்படவே, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
எந்தவொரு மருத்துவமனையிலும் இடம் கிடைக்காத நிலையில், தாயை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார், இந்நிலையில் அடுத்த நாள் காலையே அவரது தாய் உயிரிழந்தார்.
கொரோனா அச்சம் காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் வீர சிங்குக்கு உதவி செய்ய வரவில்லை, என்ன செய்வதென்று தெரியாமல் 2 கவச உடைகளை வாங்கி வந்தார் வீர சிங்.
தான் ஒரு உடையையும், தாய்க்கு ஒரு உடையையும் அணிவித்து, தாயின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு மயானத்துக்கு சென்றார். அங்கே தனது தாயின் உடலை எரியூட்டிவிட்டு கண்ணீர் மல்க வீடு திரும்பிய வீர சிங் கூறுகையில்,
கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்ற பீதியால் யாரும் உதவிக்கு வராத நிலையில் நானும் எனது மனைவியும் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தோம்.
என்னுடைய மனைவியை மயானத்துக்கு அழைத்து செல்ல முடியாது என்பதால் நானே எனது தாயின் உடலை எரியூட்டிவிட்டு வந்தேன், மனிதம் முழுமையாக செத்து விட்டது என தெரிவித்துள்ளார்.