தாயின் மரணத்தை 23 ஆண்டுகளாக மறைத்த மகள்: அதிர்ச்சி காரணம்!!

620

பிரான்ஸில் பெண்ணொருவர் ஓய்வூதிய பணத்துக்காக தனது தாய் இறந்ததை 23 ஆண்டுகளாக மறைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மார்செய்யில் இச்சம்பவம் நடந்துள்ள நிலையில் கடந்த 23 ஆண்டுகளாக தாய் உயிரோடு இருப்பதாக கூறி குறித்த பெண் ஓய்வூதிய பணத்தை சட்டவிரோதமாக பெற்று வந்துள்ளார்.

மாதம் 613 யூரோக்கள் வீதம் மொத்தம் 162,000 யூரோக்களை இத்தனை ஆண்டுகளாக பெற்றுள்ளார்.குறித்த பெண்ணின் தாயின் மருத்துவ நிலைப்பாடு குறித்து அறிய அவர் வீட்டுக்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது தாய் குறித்து அதிகாரிகள் மகளிடம் கேட்க சுற்றுலா சென்றுள்ளதாக கூறியுள்ளார், ஆனால் அதிகாரிகள் இதை நம்பவில்லை.இதையடுத்து பெண்ணிடம் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் தாய் எப்போதோ இறந்துவிட்டது தெரியவந்தது.பின்னர் பெண்ணை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.