புதுமணத் தம்பதி..
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள் நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி கர்நாடக மாநிலம் ஹேமாவதி ஆற்றில் நின்று செல்ஃபி எடுக்கும்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பெலூர் தாலுகா முரஹள்ளி கிராமத்தில் வசிக்கும் ஆர்தேஷ் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கிருத்திகா சகலேஷ்பூர் தாலுகாவில் ஹென்னலே கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் புதுமணத் தம்பதி முரளள்ளியில் தங்கியிருந்தனர். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வெள்ளிக்கிழமை முதல் அலுவலகத்திற்கு வருமாறு ஆர்தேஷை அவரது நிறுவனம் கேட்டுக் கொண்டது. பெங்களூருக்குச் செல்வதற்கு முன்பு, அர்த்தேஷ் மற்றும் கிருத்திகாவை அவரது பெற்றோர் சந்திக்க முடிவு செய்தனர்.
இதற்கிடையே புதுமணத் தம்பதிர் வியாழக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் சென்றனர். தம்பதியினர் இருவரும் ஹேமாவதி அணைக்கு சென்றனர். ஒரு அணையின் அருகே நின்று இருவரும் செல்ஃபி எடுத்தள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தம்பதியினரின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.