தமிழகத்தில்..
தமிழகத்தில் கணவனின் தன்னை ஏமாற்றி இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டது குறித்து, முதல் மனைவி புகார் அளித்துள்ளார். கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வாழைக்கொம்பு , பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம்.
இவருக்கு ஜோதி முருகேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஜோதிமுருகேஸ்வரி கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், தனக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் வெங்கமேடு VVG நகரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பாலசுப்பரமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து நான் கர்ப்பமானதால், பிரசவத்திற்காக நான் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டேன். அதன் படி கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது,
இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் தாய் வீட்டில் இருந்துவிட்டு நான் திரும்பிய போது, கணவர் பாலசுப்பரமணி, நித்யா என்ற பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் கேட்டபோது அவன் அப்படித்தான இருப்பான் என்று சொல்லி துன்புறுத்தினர். இதனால் மிகுந்த வேதனையுடன் நான் என் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
நித்யாவை எனக்கு தெரியாமலும் , என்னிடம் இருந்து விவாகரத்து பெறாமலும் எனது கணவர் பாலசுப்பரமணி அவரின் பெற்றோர் மற்றும் சகோதரிகளின் உதவியுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்பு நித்யாவுக்கு தெரியாமல் சுதா என்ற பெண்ணை கடந்த 2020-ஆம் ஆண்டு மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த 29-ஆம் திகதி பால்சுப்ரமணியை கைது செய்த பொலிசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில், பாலசுபர்மணி பெண்களை கவர்வதில் கில்லாடியாக இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
முதல் மனைவியான ஜோதிமுருகேஸ்வரியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை வைத்து ஜாலியாக இருந்த அவர், அதன் பின் அவரிடம் இதற்கு மேல் எதுவும் இல்லை என்று தெரிந்த பின்பு, தான் பணி புரியும் தனியார் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது,
அதே வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக இருந்த நித்யா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, அந்தப் பெண் கொடுத்த நகை மற்றும் வரதட்சணையை வைத்து சொகுசு வாழ்க்கை வந்துள்ளார்.
அவரிடமும் எல்லாம் காலியாக, மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஜாலியாக இருந்து வந்துள்ளார். இதற்கு அவருடைய பெற்றோருடம் உடந்தையாக இருந்து வந்துள்ளனர். இதனால் பொலிசார் தற்போது பாலசுப்ரமணியனின் பெற்றோரை தேடி வருகின்றனர்.