திடீரென உடல் எடை குறைந்த அனுஷ்கா : இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா?

624

அனுஷ்கா…

திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பல நடிகைகள் முப்பது வயதை தாண்டிய நிலையிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

காரணம் திருமணத்திற்கு பின் இவர்களால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாமல் போகலாம் மற்றும் இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் இவர்களது மவுசு குறைந்து போகும் இது போன்ற பல காரணங்களால் இன்றளவும் பல முன்னணி நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் தெலுங்கில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தார் மேலும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இரண்டு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இவரது நடிப்பு அழகான தோற்றத்தால் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

மேலும் இவர் மற்ற நடிகைகளை போல் படங்களில் கதாநாயகர்களுக்கு ஜோடியாக மட்டும் நடிக்காமல் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்த்தெடுத்து பல படங்களில் கதையின் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளார்.

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அனுஷ்கா ஷெட்டி.ஆர்யா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்து அதன்பிறகு குறைப்பதற்கு படாதபாடுபட்டு கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் தனது உடல் எடையை குறைத்து விட்டு தான் புது படத்தில் கமிட் ஆக வேண்டும் என்ற ஒரே முடிவில் அனுஷ்கா இருந்துள்ளார்.

இந்நிலையில் நிதர்சனம் படத்திற்கு பிறகு அனுஷ்கா தற்போது தெலுங்கில் யு.வி கிரியேஷன் தயாரிப்பின் உருவாகவிருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.தற்போது 40 வயதை நெருங்கும் அனுஷ்காவின் புகைப்படம் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்……