திடீர் மாரடைப்பு: பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!!

1075

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜெயந்தி கமலாகுமாரி, ஜெயந்தி என்ற பெயருடன் திரையுலகில் நுழைந்தவர்.

இவர் எதிர்நீச்சல், வெள்ளிவிழா, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் சுமார் 500 படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் ஆகியோருடனும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் சிறந்த நடிகை மற்றும் துணை நடிகைக்கான கர்நாடக மாநில அரசின் தேசிய விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் பலமுறை பெற்றுள்ளார்.

அதோடு மிஸ் மாலினி படத்தில் சிறப்பாக நடித்ததற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கையால் தேசிய விருதையும் பெற்றவர்.

தனது முதல் கன்னடப் படமான ‘ஜீனு கூடு’ படத்தை இயக்கிய பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிருஷ்ண குமார் என்ற ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், பெங்களூரில் வாழ்ந்து வரும் பழம்பெரும் நடிகை ஜெயந்தி(73) திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஸ்துமா தொற்று இருக்கலாம் என்று டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.