“தினமும் 150 கி.மீ பயணம் செய்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர்” : கிராம மக்கள் செய்த மோசமான செயல்!!

351

குஜராத்..

குஜராத் மாநிலம், சத்ரியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹையலால் பரையா. இவர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரை சில மாதங்களுக்கு முன்பு நிமனா கிராமத்தில் உள்ள பள்ளிக்கு இடம் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் இவர் தனது கிராமத்தில் இருந்து 150 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளிக்குச் சென்று வருவது இவருக்கு சிரமாக இருந்தது. இதனால் நிமனா கிராமத்திலேயே தங்கி பள்ளிக்குச் சென்று வருவதற்காக அங்கு வீடு தேடியுள்ளார்.

அப்போது, அந்த கிராமத்திலிருந்த வீட்டின் உரிமையாளர்கள் பலர், ஆசிரியர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் யாரும் அவருக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை.

இது குறித்து கல்வித்துறைக்கு ஆசிரியர் கன்ஹையலால் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இந்த புகார் குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து தனது கிராமத்திற்கு இடம் மாறுதல் கொடுக்கும் படி கல்வித்துறைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது குறித்து ஆசிரியர் கூறுகையில், சாதிய பாகுபாடு காரணமாகப் புறக்கணிக்கப்படுவது குறித்து முதலமைச்சர் புபேந்திர படலுக்குத் தெரிவித்துள்ளேன் என்றும் அவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதாக தெரிவித்துள்ளார்.