திருமணமாகி 4 மாதம்! தாலி, பூ, மெட்டியை கணவனிடம் கழற்றி கொடுத்து சென்ற மனைவி: வைரலாகும் புகைப்படம்!!

416

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணம் ஆகி நான்கு மாதங்களே ஆன நிலையில், நீட் தேர்வுக்கு சென்ற பெண் கணவரிடம் தாலி, பூ, மெட்டியை கொடுத்துவிட்டு சென்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற தேர்விற்காக, காலை 11 மணி முதலில் இருந்தே தேர்வு மைய வளாகத்திற்குள், மாணவ, மாணவியர் கடும் சோ தனைகளுக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

முதலி, உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டதுடன், தேர்வு மைய வளாகத்தில் தனிமனித இடைவெளியை மாணவர்கள் கடைப்பிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. இதேபோல் அடையாள அட்டை, ஹால் டிக்கெட், சானிடைசர், தண்ணீர் பாட்டில் மட்டுமே தேர்வறைக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து, நெல்லை மாவட்ட தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்த பெண் கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி குடும்பத்தாரிடம் கொடுத்துவிட்டு தேர்வறைக்குள் சென்றார். அதே போன்று, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் என்பவருக்கும் முத்துலட்சுமி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

நீட் தேர்வு எழுத வந்த முத்துலட்சுமி, தாலி, பூ மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றி கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.