திருமணமான புதுப்பெண் திடீர் மாயம் : பரிதவிக்கும் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

375

கன்னியாகுமரி..

திருமணமாகி இரண்டு மாதமான புதுப்பெண் தனது தோழியுடன் மாயமான சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே ஆசாரிவிளை காலனியை சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகள் மார்க்ரெட் ஜெரின்(21).

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் மார்க்ரெட் ஜெரின் அவரது அதே பகுதியை சேர்ந்த அவரது தோழி ஆஷிகா (18) என்பதுடன் சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.

பின்னர் இவர்கள் இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய பெற்றோர்கள் இருவரையும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என பல இடங்களில் தேடியுள்ளனர்.

எங்கும் அவர்களை கண்டுபிடிக்க முடியல்லை. இதுகுறித்து மார்க்ரெட் ஜெரினின் தாயார் ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிசந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.