திருமணமான 15 நாட்களில் வீட்டிற்குள் புகுந்து மகளை தூக்கிச் சென்ற பெற்றோர் : துணிகர சம்பவம்!!

368

பெற்றோர்…..

தமிழகத்தில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை அவரின் பெற்றோர் க டத்திச் சென்றுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கோயமுத்தூர் மாவட்டம், இடையர்பாளையம் லூனா நகர், வித்யா காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவரும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சக்தி தமிழினி பிரபா(25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் ம றுப்பு தெரிவித்ததால், கடந்த 5-ஆம் திகதி கோயமுத்தூரில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின், கார்த்திகேயன், அவர் பெற்றோர் மற்றும் சக்தி தமிழினி பிரபா ஆகியோர் ஒன்றாக வசித்து வந்த நிலையில்,

கடந்த 19-ஆம் திகதி பெண்ணின் தந்தை, தாய் மற்றும் அடையாளம் தெரியாத சிலர், கார்த்திகேயன் வீட்டின் உள்ளே புகுந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தா யை அ டித்துவிட்டு, சக்தி தமிழினி பிரபாவை தூ க்கிச் சென்றுள்ளனர்.

இதனால் கார்த்திகேயன் உடனடியாக, அருகில் இருக்கும் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குறித்த புகாரில், கார்த்திகேயன் வீட்டில் பொருளாதார வசதி இல்லாததும், இருவரும் மாற்று சமூகத்தினர் என்பதாலும் பெண் வீட்டார் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

பெண்ணின் தந்தை காவல்துறையில் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர் என்பதால் காவல் நிலையத்தில் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.