திருமணமான 5 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

370

தஞ்சாவூர்…

தமிழகத்தில் திருமணம் ஆன ஐந்து மாதங்களில் கணவன் மற்றும் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெம்மேலி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு பிரபாகரன் (32) என்ற மகன் உள்ளார். இந்நிலையில்,

பிரபாகரனுக்கும், தெக்கூர் பகுதியை சேர்ந்த மும்மூர்த்தி மகள் அஜிதா (27) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபாகரனின் தந்தை திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்டதால், பிரபாகரன், அஜிதா மற்றும் பிரபாகரனின் தாயார் மகேஸ்வரி ஆகிய 3 பேரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். மகேஸ்வரி ஒரத்தநாடு உள்ள அரசு மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று வேலைக்காக மகேஸ்வரி வேலைக்கு சென்றுள்ளார். அன்று மாலை, பிரபாகரன் உறவினர் ஒருவர் பிரபாகரனை தேடி வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டிற்குள் கணவன் மற்றும் மனைவி இருவரும் விஷம் அருந்தி இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.