திருமணம் செய்து வைக்குமாறு கோரிய கல்லூரி மாணவி : காதலருடன் செல்போனில் பேசிவிட்டு எடுத்த விபரீத முடிவு!!

1225

கடலூர்…..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகையைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி. தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த இவரது மகள் கிருத்திகா(19), தனது மாமன் மகனை ஆறு மாதகாலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரை திருமணம் செய்து வைக்கக் கோரி தன் பெற்றோரிடம் கிருத்திகா கேட்டுள்ளார். ஆனால் படிப்பு முடிந்த பின்னர் தான் திருமணம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாகவே கிருத்திகாவுக்கும், அவரது பெற்றோருக்கும் மன வருத்தம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கணினி பயிற்சி மையத்திற்கு சென்று திரும்பிய மாணவி கிருத்திகா, தனது மாமன் மகனை செல்போனில் அழைத்து வல்லம்படுகை ரயில் நிலையத்தில் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த அவர், உடனடியாக கிருத்திகாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெற்றோர் கிருத்திகாவை தொடர்பு கொள்ளும் முன் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பொலிஸார் கிருத்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.