தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல அரசியல்வாதியின் பேத்தி : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

375

சௌந்தர்யா…

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா(வயது 30) இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எடியூரப்பாவின் மூத்த மகளான பத்மாவின் மகள் சௌந்தர்யா, மருத்துவராகும் கனவோடு படிப்பை முடித்த சௌந்தர்யா பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

அங்கு தன்னுடன் பணியாற்றிய சக மருத்துவரை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமும் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சௌந்தர்யா வசித்து வந்தனர்.

இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ள நிலையில், சௌந்தர்யா இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது மரணம் எடியூரப்பா குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, தகவல் அறிந்தவுடன் விரைந்து சென்ற கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எடியூரப்பா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னது குறிப்பிடத்தக்கது.