தொடங்குவதற்கு முன்பாகவே மரணகலாய் வாங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி! வைரலாகும் வீடியோ!

718

பிரபல தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி உலகமெங்கும் ஒளிபரப்பாகி தமிழ் மக்களிடையே பெருமளவில் பேசப்பட்டது.இந்நிகழ்ச்சி, பெரிய அளவிற்கு வெற்றி பெறுவதற்கு இந்த மீம் கிரியேட்டர்களும் ஒரு காரணமாக இருந்தார்கள் என்றே கூறலாம்.

ஏனென்றால், நிகழ்ச்சியை குறித்து வெளிவந்த மீம்களைப் பார்த்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டுமென்று பலருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியது.இதற்கிடையில், பிக்பாஸ் இரண்டாம் பாகத்தின் டீசரும் கூட வெளிவந்து விட்டது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், முதல் பாகத்தின் ப்ரோமோ வீடியோ அளவிற்கு இந்த வீடியோ இல்லை என விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பங்கமாக கலாய்த்து தள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

https://youtu.be/4z4Fbnm3vT4