நடிகர் கார்த்தி படத்தில் அறிமுகமாகும் இயக்குநர் ஷங்கர் மகள்!!

258

விருமன்…

சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள படத்துக்கு விருமன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இயக்குநர் சங்கரின் மகன் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும் படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். முன்னதாக முத்தையா, கார்த்தி இருவரும் இணைந்து நடித்த கொம்பன் படம் ரசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை கார்த்தி தான் பணிபுரிந்த இயக்குநருடன் மீண்டும் பணிபுரிந்ததில்லை.

முதல்முறையாக இந்தமுறை முத்தையாவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.