நடிகர் சூர்யா- ஜோதிகா காதல் விவகாரத்தில் தலையிட்ட ஜெயலலிதா: சுவாரசிய தகவல்!

853

தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாய் வலம் வரும் நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.7 படங்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்ததன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது.

ஜோதிகா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர், இவர்களின் திருமணத்திற்கு ஆரம்பத்தில் பெற்றோர்களிடம் இருந்து சம்மதம் கிடைக்கவில்லை.காதலிக்க தொடங்கியதில் இருந்து சில ஆண்டுகள் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்புகளில் மிகவும் அமைதியாக இருக்கும் சூர்யா, பெண்கள் மீது காட்டும் மரியாதையே அவரை பிடித்துப்போனதற்கு காரணம் என பேட்டிகளின் போது ஜோதிகா கூறியிருக்கிறார்.

தனது காதல் பற்றி நடிகர் சூர்யா, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார். தங்கை பிருந்தாவின் திருமணம் நடைபெற்றபோது ஜெயலலிதா அங்கு சென்றிருக்கிறார். அப்போதுதான் இதுகுறித்து சூர்யா, ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்.

பின்னர், இதுகுறித்து ஜெயலலிதா, சிவக்குமாரிடம் தெரியப்படுத்தியதையடுத்து இவர்கள் திருமணம் நடந்துள்ளது. இந்த தகவலை ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், சூர்யா தெரியப்படுத்தினார்.

பெற்றோரின் சம்மதத்துடன் தான் நமது திருமணம் நடக்கவேண்டும் என்பதில் சூர்யா உறுதியாக இருந்ததால் 2006 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

சூர்யா போன்று ஒரு ஆண்மகனை நான் பார்த்தது கிடையாது, அதனால் தான் அவரை நான் திருமணம் செய்துகொண்டேன், எனது கணவனின் குணத்தில் பாதியாவது எனது மகன் தேவ்க்கு இருக்க வேண்டும்.

எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட அருகில் இருந்து அன்போடு பார்த்துக்கொள்வார், அந்த அளவுக்கு அக்கறையும், எனது உணர்வுகளுக்கு மதிப்பும் அளிக்கக்கூடியவர் என மகிழ்கிறார் ஜோதிகா.