நபர் ஒருவரின் வயிற்றில் இருந்த 122 ஆணிகள் : மருத்துவர்கள் அதிர்ச்சி!!

616

வயிற்றில் இருந்த 122 ஆணிகள்

எத்தியோப்பியர் ஒருவர் வயிற்றில் இருந்து 122 இரும்பு ஆணிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். எத்தியோப்பிய தலைநகரான Addis Ababaவைச் சேர்ந்த 33 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், 10 சென்றிமீற்றர் நீளமுடைய 122 ஆணிகள், நான்கு பின்கள், பல் குத்தும் குச்சி ஒன்று மற்றும் உடைந்த கண்ணாடித்துண்டுகளை விழுங்கியிருந்ததாக செயிண்ட் பீட்டர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரான Dawit Teare தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிகிச்சையை நிறுத்தி விட்டதாகவும், ஒருவேளை அதனால் அவர் இவ்வாறு ஆணிகள் போன்ற பொருட்களை விழுங்கத் தொடங்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள் அந்த ஆணிகள் முதலான பொருட்களை நோயாளியின் வயிற்றிலிருந்து அகற்றினர்.

ஒரு வேளை அவர் தண்ணீர் குடித்து குடித்து இந்த ஆணிகளை விழுங்கியிருக்கலாம், அதனால்தான் அவை அவரது வயிற்றைக் கிழிக்கவில்லை, அவ்வாறு கிழித்திருந்தால் அவருக்கு மோசமான நோய்த்தொற்று ஏற்பட்டு அதனால் மரணம் கூட ஏற்பட்டிருக்கலாம் என்றும் Dawit தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டு கூர்மையான பொருட்களை விழுங்கிய பலரை சந்தித்திருந்தாலும் இவ்வளவு பொருட்களை விழுங்கிய ஒருவரை இதுவரை சந்தித்ததில்லை என்றார் Dawit. அந்த நோயாளி குணமடைந்து வருவதாகவும் Dawit தெரிவித்தார்.