நமீதா படத்திற்கு வந்த சோதனை! படக்குழு எடுத்த விரக்தி முடிவு!

562

நடிகை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கடந்த வருடம் தன் காதலர் வீர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் தெலுங்கு சினிமாவை சேர்ந்த தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நமீதா மீண்டும் டி.ராஜேந்தர் இயக்கும் படத்தில் வில்லியாக நடிக்கவுள்ளதாக தகவல் அண்மையில் வெளியானது. பல படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்த அவர் பொட்டு என்ற படத்தில் அகோரியாக நடித்திருந்தார்.

இதற்காக தன் அழகான தோற்றத்தை வில்லனாக மாற்றினார். வடிவுடையான இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் மே 25 ல் வெளியாக இருந்தது.

ஆனால் அதே நாளில் பல படங்கள் வருவதால் இந்த படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லையாம். இதனால் படக்குழு மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்கள். மேலும் படத்தை தள்ளி வைத்து வேறொரு நாளில் வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தில் மனு கொடுத்துள்ளார்களாம்.