நான் சாக போகிறேன்.. போன் செய்து மாடியிலிருந்து குதித்த மாடல் அழகி.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!!

293

மாடல் அழகி..

ராஜஸ்தானில் நட்சத்திர ஓட்டலின் ஆறாவது மாடியிலிருந்து அழகி குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் குங்குன் உபாத்யாய். மாடல் அழகியான இவர் ரத்தனாடா பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியுள்ளார்.

அப்போது, விடுதியின் ஆறாவது மாடியிலிருந்து கொண்டு அவரது தந்தைக்குப் போன் செய்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், உங்கள் முகத்தைப் பார்க்க ஆசையாக இருக்கிறது எனக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அவர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் போலிஸார் குங்குன் தங்கியிருந்த விடுதியை கண்டுபிடித்து வருவதற்குள் அவர் ஆறாவது மாடியிலிருந்து குதித்துள்ளார்.

அவரை விடுதி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாடல் அழகியான குங்குன் சுயநினைவு திரும்பிய பிறகே அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.