நிரம்பிவழியும் மருத்துவமனைகள்..! சிகிச்சைக்காக காத்துக்கிடக்கும் உயிர்கள்…!

276

மருத்துவமனை………..

சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள 150 ஆக்சிஜன் படுக்கைகளும், ஐந்து வெண்டிலேட்டர் படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பியதால், அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

கோவை : கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகொண்ட 300 படுக்கைகளும் முழுவதும் நிரம்பியதால், புதிதாக வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸ் மற்றும் தங்களது சொந்த வாகனங்களில் காத்திருக்கும் சூழல் தொடர்ந்து வருகிறது.

இதனால் சாதாரண படுக்கைகளை ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளாக மாற்றும் நடவடிக்கைகளில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 717 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியதால் அங்கும் சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழலில் ஏற்பட்டுள்ளது.

கடலூர் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் வளாகத்தில் தங்கி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் அரசு மருத்துவமனையிலுள்ள சாதாரண மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால், புதிதாகவரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் திணறிவருகிறது. இதனால் நோயாளிகளை மருத்துவமனை வளாகத்தில் படுக்க வைத்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 100 ஆக்ஸிஜன் படுக்கைளும், பெருந்துறை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் மொத்தமுள்ள 380 ஆக்சிஜன் படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பின.

இதனால் புதிதாக சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 100 ஆக்ஸிஜன் படுக்கைளும், பெருந்துறை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் மொத்தமுள்ள 380 ஆக்சிஜன் படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பின.

இதனால் புதிதாக சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 200 படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பியதால் புதிதாக வரும் நோயாளிகள் ஆம்புலன்ஸ்களிலும், ஆட்டோக்களிலும் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில் பாண்டூர் பகுதியில் உள்ள இந்திரா அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் 54 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் நாளை முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 260 ஆக்சிஜன் படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பியதால், புதிதாகவரும் நோயாளிகள் மருத்துவமனை வாசலிலேயே காத்திருக்கின்றனர்.கொரோன நோயாளிகளுடன் அவர்களது உறவினர்களும் காத்துக் கொண்டிருப்பதால் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 347 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுவரும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் கட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.