நீராவி பிடித்தால் கொரோனா தொற்றை சரிசெய்ய முடியுமா?

916

நீராவி பிடித்தல்…

கொரோனா தொற்றிலிருந்து விடு பெற நீராவி பிடித்தல் முறை ஒரு நிவாரணமாக இருக்கிறது என்று சமீபத்திய செய்திகளில் நாம் அதிகமாக கேட்டு கொண்டு வருகிறோம்.

உண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவுமா? இல்லை என்ற பலரிடையே உண்டு.

அந்தவகையில் இதுப்பற்றிய மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

நீராவி பிடிப்பது கொரோனாவை அழிக்க உதவுமா?

நீராவி பிடிப்பதன் மூலம் சுவாச பிரச்சனைகள், நாசி பாதையில் தொற்று, காற்று பாதைகளில் உள்ள பிரச்சனைகள் போன்றவை குறையும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் இது கொடிய இந்த கொரோனா வைரஸை அழிக்க உதவாது என்றும் கூறுகின்றனர்.

நமது நுரையீரல் மென்மையானது என்பதால் அதிக சூடான நீராவியை மூச்சின் மூலம் உள்ளிழுப்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்காது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது நுரையீரல் மற்றும் காற்று பாதைகளை சேதப்படுத்தக் கூடும் என்று கூறுகின்றனர். ஆனால் ஒரு சில நிபுணர்கள் இந்த முறை, சுவாச பிரச்சினையின் அறிகுறிகளை சரிசெய்ய உதவும் என்று கூறுகின்றனர்.

பக்கவிளைவுகள் ஏதுவும் உண்டா?

சில நிபுணர்கள் நீராவி பிடிப்பதன் மூலம் தீக்காயம் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை தெளிவாகக் கூறுகின்றனர். மேலும் சில நிபுணர்கள் கொரோனா வைரஸை குணப்படுத்த இந்த நீராவி பிடித்தல் முறையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இந்த முறை வைரஸை கொல்ல பயன்படாது என்றும் அதிக சூடான நீரை கையாளும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பு

கொரோனாவை குணப்படுத்த இந்த நீராவி பிடித்தல் முறை பயன்படாது என்றாலும், கொரோனா தொற்றில் உள்ளவர்களுக்கு ஒரு ஆசுவாசமாக இந்த முறை இருக்கும். நாசி பாதைகளில் உள்ள அசௌகரியங்களை சரிசெய்ய இந்த முறை உதவுகிறது.

சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது நிவாரணியாகவும், இதை எளிதில் குணப்படுத்தவும் உதவுகிறது.