நோயாளிகளை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் மீது கார் மோதி விபத்து : பல்டி அடித்த காட்சி!!

283

ஆம்புலன்ஸ்………

செகந்திராபாத் அருகே நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தின் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

செகந்திராபாத்தில் உள்ள கிளாக்டவர் வழியாக நோயாளிகள் இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது,

விபத்தை நேரில் பார்த்த அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு ஆம்புலன்சில் இருந்த இரண்டு நோயாளிகளை வேறு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எனவே வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மிதமிஞ்சிய வேகத்தில் ஓட்டிச் செல்கின்றனர். இதுவே விபத்திற்கு காரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் செகந்திராபாத் போலீசார் கூறுகின்றனர்.