படிச்சது எல்லாம் மறந்துபோகுது… ஞாபக மறதியால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

588

ஈரோடு…

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள குமரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவி வீட்டில் இருக்கும் போது மாத்திரை ஒன்றைச் சாப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரின் அந்த இது குறித்து கேட்டுள்ளார்.

இதற்கு மாணவி, ‘என்னால் சரியாகப் படிக்க முடியவில்லை. ஞாபகமறதி அதிகம் இருக்கிறது.எனக்கு வாழ பிடிக்கவில்லை’ என கூறிக்கொண்டிருக்கும் போதே வீட்டில் இருந்து மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.