படுக்கையறையில் பிணமாக கிடந்த இளம் நடிகர்!!

747

பிரபல தொலைக்காட்சி நடிகரான கரண் பரஞ்பே படுக்கையறையில் பிணமாக கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தில் மில் கயி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கரண் பரஞ்பே(26), அந்நிகழ்ச்சியில் ஆண் நர்ஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்ததால் குறித்த கதாபாத்திரத்தின் பேரிலேயே ஜிக்னேஷ் என அழைக்கப்படுவார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது வீட்டு படுக்கையறையில் பிணமாக கிடந்துள்ளார், இதை பார்த்த அவரது தாய் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

கரணுக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவரது மரணம் சக நடிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.