பணி நீக்கம் செய்ததால் மைக்ரோ சாப்டின் 1,200 கணக்குகளை நீக்கிய டெல்லியை சேர்ந்த நபர்!! பின் நேர்ந்த விபரீதம்!!

265

தீப்பன்ஷூ கேர்………

டெல்லியை சேர்ந்த தீப்பன்ஷூ கேர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தால் கலிபோர்னியாவின் கால்ர்ஸ்பேட்டில் (Carlsbad) உள்ள மைக்ரோ சாப்டின் தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டார். இடம்பெயர்வு தொடர்பான அலுவல்களுக்கு உதவியாளராக அவர் பணியமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் நிறுவனத்தின் எதிர்பார்ப்பை தீப்பன்ஷூ பூர்த்தி செய்யததால், 2018ம் ஆண்டு மே மாதம் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிய அவர், பணி நீக்கம் செய்யப்பட்ட விரக்தியில் மைக்ரோ சாப்டின் சர்வரை ஹேக் செய்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 1,200 ஊழியர்களின் கணக்குகளை நீக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் சார்ப்பில் அமெரிக்காவின், கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிறுவனத்தின் சார்பில் வாதாடிய ரான்டி கிராஸ்மேன் கூறுகையில் ‘மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை பழி தீர்க்கும் விதமாக இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். மேலும் இது நன்கு திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது’ என்றார்.

மேலும் இதுதொடர்பாக நிறுவனத்தின் துனை தலைவர் கூறுகையில், தீப்பன்ஷூ கீர்-யின் இந்த செயல் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மைக்ரோ சாப்ட் ஊழியர்கள் தங்கள் இ-மெயில், அறிமுகமானவர்களின் எண்களின் பட்டியல் போன்ற பல முக்கிய விஷயங்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் அவரை கைது செய்வதற்காக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக எந்த தகவலும் தீப்பன்ஷூக்கு சென்று சேரவில்லை. இந்நிலையில் அவர் வேறு வேலை விஷயமாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கவிற்கு சென்றிருந்தார். அப்போது காவல் துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். இதையடுத்து, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.