பார்க்கின்சன் நோயுடன் போராடிய பெண் பத்திரிகையாளர்: தூக்கத்தில் இருந்தபடியே மரணம்

756

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான Liz Jackson. ஏபிசி பத்திரிக்கையில் பணியாற்றிய இவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று தூக்கத்தில் மரணமடைந்தார்.

வால்கெய் விருது வென்ற ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளரானா லிஸ் ஜாக்சன் பார்க்கின்சன் நோயோடு தொடர்ந்து போராடி வந்தார். இவர் புகழ் பெற்ற ஏபிசி பத்திரிகையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர்.

ஏபிசி பத்திரிகையில் இருந்து ஓய்வு பெற்ற 18 மாதங்களில் பார்க்கின்சன் நோயால் இவர் பாதிக்கப்பட்டார். அதன்பின் இந்த நோயோடு போராடிய லிஸ் தனது 67வது வயதில் கிரீஸ் நாட்டில் தனது கணவரோடு இருக்கும்போது தூக்கத்திலேயே மரணமடைந்திருக்கிறார்.

இவர் பெண் பத்திரிகைகையாளர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் செயல்பட்டவர். அனைவருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்தவர் என்று ஏபிசி பத்திரிக்கை சார்பாக அஞ்சலி செலுத்தும்போது கூறியுள்ளனர்

இவரது குடும்பத்தார் பேசும்போது லிஸ் ஒரு நல்ல அம்மா, நல்ல பாட்டி, நல்ல கதை சொல்லி, மற்றும் அருமையான செஃப் ஆகவும் இருந்து குடும்பத்தை பார்த்து கொண்டார் எனவும் கூறினர்.தனது பார்கின்சன் நோய் பற்றி லிஸ் பேசிய வீடியோ ஒன்றின் சில துளிகள் உங்கள் பார்வைக்கு

லிஸ் மனித மூளையில் ஏற்படக்கூடிய சிக்கலான நோயான பார்க்கின்சன் நோய் பல்வேறு மக்களுக்கு பல்வேறு விதமான வகையில் விளைவுகளை ஏற்படுத்த கூடியது என்று தான் அறிந்திருப்பதாக அவர் அந்த வீடியோவில் கூறுகிறார்.

பார்க்கின்சன் நோய் அவரது வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தியது என்றும் , உடல்நிலை மோசமான முறையில் பலவீனப்படுத்தியது என்றும் , தனது சுய விழிப்புணர்வையும் பலவீனப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகின் மிக கொடூர நோய்களில் ஒன்றான பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த லிஸ் பத்திரிகையாளர்களுக்கான மிக உயரிய விருதான வால்கெ விருதை இவர் எட்டு முறை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.