பாறைக்குழியில் மீன் பிடிக்க சென்ற சகோதரர்கள் : அவர்களுக்கு அரங்கேறிய சோகம்!!

256

திருப்பூர்…

பாறைக்குழியில் மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன்கள் சத்யா (வயது 13), குமரன் (வயது 11). பள்ளி மாணவர்களான இருவரும் வீட்டின் அருகேயுள்ள பாறைகுழிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் சிறுவர்களை தேடி பார்த்துள்ளனர். சிறுவர்கள் சென்ற சைக்கிள் மற்றும் அவர்களது உடைகள் பாறைகுழி அருகே இருந்துள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பாறைகுழியிலிருந்து சிறுவர்களை இருவரையும் இறந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் கூறுகையில், சிறுவர்கள் மீன்பிடிக்க சென்ற போது, தூண்டில் மாட்டியிருந்திருக்கலாம், அதை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதில் இருவரும் இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டில் உள்ள சிறுவர்கள் மீது பெற்றோர்கள் கவனம் கொள்ளாமஙல இருந்தால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது.