பிக்பாஸ் 2 டீசரில் வரும் பெண் யார் தெரியுமா? முன்னணி நடிகரின் மனைவி!!

758

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் இரண்டாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. அதற்கான ஷூட்டிங் துவங்கி நடந்துவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தல அஜித்தின் மங்காத்தா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்த நடிகர் அஸ்வின் இன்று கமலுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த பலரும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்கிறாரா என கேட்க துவங்கியுள்ளனர்.

இந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றாலும், அவரது மனைவி பிக்பாஸ் டீசரில் தோன்றியிருப்பது தெரியவந்துள்ளது. டீஸர் ஷூட்டிங்கின்போது தான் அஸ்வின் கமலை சந்தித்து போட்டோ எடுத்துள்ளார்.