பிக்பாஸ் 2-வில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார்  தெரியுமா?

876

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார், யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.பிரபல தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. ஆரம்பத்தில் பல எதிர்ப்புக்கள் இருந்தாலும், பிறகு ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

பிக்பாஸ் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீசனில் கலந்துகொள்ள பல பிரபலங்களுக்கு பிக்பாஸ் குழு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ராய்லஷ்மி, ஜனனி ஐயர், சொர்ணமால்யா, கீர்த்தி சாந்தனு, லட்சுமி மேனன், இனியா, ரக்‌ஷிதா, பூனம் பாஜ்வா, ஆலியா மானசா, பரத், ஷாம், ஜித்தன் ரமேஷ், ப்ரேம்ஜி, பவர் ஸ்டார் சீனிவாசன், தாடி பாலாஜி, பாலசரவணன், அசோக் செல்வன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பட்டியலில் உள்ளவர்கள் பாதி பேர் வெளியேறவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.