பிக் பாஸ் 2 ரகசியத்தை உடைத்த நடிகை! யார் யார் கலந்துகொள்ள போகின்றனர்?

963

கடந்த ஆண்டு மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். அதனை தொடர்ந்து மக்கள் பிக்பாஸ் சீசன் 2-விற்காக காத்திருந்தனர்.

அண்மையில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் கமல். மேலும் அவரே இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார் என்பது நாம் அறிந்ததே.

டீசர் பார்த்த ரசிகர்கள் பல விஷயம் இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம், அந்த டீசர்க்கான காட்சி ஒளிப்பதிவு செய்தது வேறு யாரும் இல்ல ஜார்ஜ் வில்லியம்ஸ். மேலும் இவர் கமல் ஹாசன் கண்களை பற்றி குறிப்பிட்டு இருந்தார். பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிப்பதிவாளர் இவர் தான் என்று சொல்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 2 வெளியான முதல் இந்த சீசனில் போட்டியாளர் யார் பங்கேற்கிறார்கள் என ரசிகர்கள் மத்தியில் ஏதிர்பாப்பு நிலவி வருகிறது. இந்த வகையில் நடிகை ராய் லக்ஷ்மி இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார் என செய்தி வெளியாகியது. ஆனால் அதற்கு அவர் டுவிட்டர் பக்கத்தில் ஏன் வதந்தியை பரப்புகிறீர்கள்… நான் அங்கு வந்தால் வீடே பற்றி எறியும் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் எங்க வீட்டு மாப்பிள்ளையில் கலந்து கொண்ட அபர்ணதியும் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.

ஸ்ரீபிரியா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் சென்ற ஆண்டு நான் பிக் பாஸ் சீசன் பற்றி கருத்து சொல்லி இருந்தேன். அதே போல் இந்த ஆண்டு கருத்து சொல்லவா என ஸ்ரீபிரியா தனது ரசிகர்களிடம் கருத்து கேட்டு இருக்கிறார்.