தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு சஞ்சய், ஷாசா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூத்தவரான சஞ்சய் சென்னையில் இருக்கும் ‘அமெரிக்கன் இன்டர்நேசனல் பள்ளி’யில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தாண்டு பள்ளிப்படிப்பை முடித்துள்ள அவர், பட்டம் பெரும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வலம்வருகிறது.
விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படத்தில், குட்டி பையனாக தோன்றி இருந்த சஞ்சய் இன்று, அவரது தந்தையின் உயரத்திற்கு வளர்ந்து விட்டார்.இடையிடையே அவரது புகைப்படங்கள் வெளியாகி பிரபலமாகும் நிலையில், அவர் பள்ளிப்படிப்பை முடித்து பட்டம் பெரும் காணொளியும் தற்பொழுது பிரபலமாகி வருகிறது.
குறிப்பிட்ட வீடியோவில் சகோதரர் சஞ்சய் உடன், விஜய்யின் மகள் ஷாசாவும் இடம்பெற்று இருக்கிறார். 12 வயதான ஷாசவும் அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் அவர் கலந்துகொண்ட விளையாட்டு போட்டியை பார்க்க, நடிகர் விஜய் சென்றிருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
#America International School ல் படிக்கும் தளபதியின் மகன் #Sanjai கு #graduation ???#ThalapathyVijay ???
— Charming JananI (@jananioffl) June 3, 2018