சித்ரா….
பிரபல திரைப்பட நல்லெண்ணய் சித்ரா மாரடைப்பால் காலமானார். 80’களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா. நடிகர் ரஜினியுடன் ஊர்க்காவலன், பிரபுவுடன் ‘என் தங்கச்சி படிச்சவ’ போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் புகழ் பெற்றார், சித்ரா. ‘சேரன் பாண்டியன்’ படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த சித்ராவின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.
பல மலையாள வெற்றிப்பபடங்களில் நடித்து கேரளாவிலும் மிக திறமையான நடிகையாக அறியப்பட்டவர், சித்ரா. டிவி சீரியல்களிலும் நடித்துவந்த சித்ரா, பல விளம்பர படங்களிலும் நடித்தார்.
அப்படி ஒரு நல்லெண்ணய் விளம்பர படத்தில் நடித்ததால், அதன்பிறகு அவர், ‘நல்லெண்ணய்’ சித்ரா என அறியப்பட்டார்.
நடிகை சித்ரா கடைசியாக ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார். அந்த படம் 2020 ஜனவரி 3ந்தேதி வெளியானது.
இந்த நிலையில் சித்ரா திடீரென மாரடைப்பால் இறந்துள்ளார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் இருக்கிறார். அவர் இந்தாண்டு பிளஸ் டு முடித்துள்ளார்.
குழந்தையை வளப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்துள்ளார். அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.