பிரபல நடிகரின் தாயார் மரணம் : துடித்துப் போன நடிகர்!!

1668

பிரபல தொலைக்காட்சி நடிகர் ராஜீவ் கந்தல்வாலின் அம்மா விஜயலட்சுமி புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.

இது குறித்து ராஜீவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், ஒன்றரை வருடமாக புற்றுநோயுடன் போராடிய என் அம்மா இறந்துவிட்டார்.

நாங்கள் ஒன்றாகப் போராடினோம், நாங்கள் ஒன்றாக நம்பிக்கை வைத்தோம், இப்போது அவர் என்னுள் வாழ்கிறார்.

இந்த போராட்டத்தின் போது எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், அவர்களுக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டிருப்பேன் என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.