பிரபல நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டில் சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை!!

408

தர்ஷன்…

பிரபல கன்னட நடிகரின் பண்ணை வீட்டில் சிறுமி ஒருவருக்கு, அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் வன்கொடுமை தொல்லை அளித்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

நாளுக்கு நாள் முதியவர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பல வன்கொடுமை சம்பவம் நடைபெற்று வரும் தற்போது பிரபல நடிகர் வீட்டிலேயே சிறுமிக்கு வன்கொடுமை நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகரான தர்ஷனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இந்த கொடூர சம்பவம் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நிலையில், தற்போதே இத்தகவல் வெளியே கசிந்துள்ளது.

நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டில் குதிரைகளை கவனித்து வந்த ஒரு தொழிலாளி, அதே பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கதறியபடி கூறவே, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிசார் அந்த குதிரைகளை கவனித்து வந்த தொழிலாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.